1517ஆம் ஆண்டுஅக்டோபர் 31,திருச்சபையின்மறுமலர்ச்சி மலர்ந்த நாள்!அன்றுதான்,புனித மார்டின் லூத்தர் எனும்ஜெர்மானியத் துறவி,அவரது 95 கோட்பாடுகளை விட்டன்பர்க் தேவாலயக்கதவினில் ஆணியறைந்தார்.அதுவே, உலக வரலாற்றின்மிகப்பெரிய கிறிஸ்தவப்புரட்சியின் ஆணிவேரும்,ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம்வருகைக்கான ஆரம்ப ஒலியலையுமா விளங்கிற்று!

மாமனிதர், டாக்டர் லூத்தர் 1483ஆம் ஆண்டுநவம்பர் 10ஆம் தேதி ஜெர்மனியிலுள்ள ஈல்பன்((Eisleben) எனும் ஊரில் ஜான் லூத்தருக்கும்,மார்கரெட் லூத்தருக்கும் மகனாய்ப் பிறந்தார். அதுஓர் ஏழைக் குடும்பமாயினும், சிறுவன் லூத்தருக்கோ(புனித கொலம்பாவைப்போல) நன்கு பாடும் குரல்இருந்தது. அநேக வேளைகளில் அவரது பாடல்தான்அக்குடும்பத்திற்கு இரவு உணவைச் சம்பாதித்தது.

லூத்தர் பிறந்த 10 ஆண்டுகளுக்குள்ளாகவே ஜான்காபோட் உலகின் புதிய பகுதியைக் கண்டுபிடித்தார்.லூத்தரின் மறுமலர்ச்சிக்குச் சாத்தான் கொணரும்தாக்குதலின் உக்கிரம் ஐரோப்பாவில் பயங்கரமாயிருக்கும் என முன்னறிந்த தேவன்தாமே, சீர்திருந்தும் கிறிஸ்தவர்க்கென்று இவ்வாறு புதிய உலகை ஏற்படுத்தினார் எனலாம்.

 

ஒருமுறை, மின்னலின் தாக்குதலில் மயிரிழையில்தப்பின லூத்தர், துறவியாவேன் எனப் பொருத்தனை செய்து கொண்டார். உலகை வெறுத்து ஒரு துறவியர்இல்லத்தில் தன்னை அடைத்துக் கொள்வதால் தேவனுக்குப் பணிவிடை செய்வதாய் நம்பினார். ஆயினும்,அந்த மடத்தின் கனத்த மதில்களுக்கு தன் உள்ளத்தில் எரியும் இச்சைகளை எழாமல் தடுக்கும் வலுவில்லை என்பதை விரைவில் புரிந்துகொண்டார். சுயக்கட்டுப்பாடு, உபவாசம், உறங்காதிருத்தல், சாட்டையால் தன்னையே அடித்துக்கொள்ளுதல் போன்றமுயற்சிகளும் தனக்குள் சமாதானம் கொண்டுவர இயலாதவை என அறிந்த அவரது உள்ளம் குழம்பித்தவித்தது.

 

ஒருநாள், மிகவும் தற்செயலாய், அம்மடத்திலுள்ள பாழடைந்த ஒரு பழைய அறையில், ஒரு வேதப் புத்தகத்தைக் கண்டெடுத்தார். ஜெர்மானிய மொழிபெயர்ப்பான அந்த வேதப்புத்தகம், மொழியறிஞர்களே புரிந்துகொள்ளக்கூடிய இலத்தீன் மொழியில் இருந்தது.அதிர்ஷ்டவசமாக, இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் மார்ட்டின் லூத்தர் சிறப்பான புலமைப் பெற்றிருந்தார்.

 

புத்திசாலியான மார்ட்டின், கற்றுக்கொள்ளும்ஆர்வத்திலும் வேகத்திலும் மற்ற மாணவரைவிடச்சிறந்து விளங்கினார். 1508ஆம் ஆண்டு இறையியல்பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

 

1510இல், ஒன்றுமறியாத இளம் துறவியாயிருந்த அவர் ரோமாபுரிக்குச் சென்றார். பரிசுத்த நகரம் என அவருக்குச் சொல்லப்பட்டிருந்த அவ்விடம், உண்மையிலேயே அசுத்த நரகம் என்பதைக் கண்டு கொண்டலூத்தரின் அதிர்ச்சிக்கு அளவேயில்லை. பாவ மன்னிப்புக் கென்று, பிலாத்துவின் ஏணிப்படிகளில் முழங்கால்களினாலேயே ஏறும்போது “விசுவாசத்தினாலேநீதிமான் பிழைப்பான்” என்ற இடிமுழக்கக் குரல்ஒன்றைக்கேட்டார். அந்த நாட்களில், புதிதாய்க் கட்டப்பட்டுக்கொண்டிருந்த புனித பேதுரு பேராலயத்தின் கட்டுமானப்பணிக்கானப் பணத்தேவை மிகவும் பெரிதாயிருந்தது.இதுதான் ‘பாவமன்னிப்புச் சீட்டு’ என்ற பெரிய ஏமாற்றுவேலைக்குக் காரணமாக அமைந்தது. இந்த ரோமாபுரிப் பயணத்தைப் பற்றிப் பின்னாளில் லூத்தர் இவ்வாறு கூறினார்: “நரகம் என்ற ஒன்று இருக்குமானால்,அதின்மேல்தான் ரோமாபுரி கட்டப்பட்டுள்ளது,” எனரோமாபுரியின் தெருக்களில் மக்கள் பேசிக்கொண்டுசெல்வதை என் செவிகளாலேயே கேட்டேன்.

 

மீட்பைக் காசுக்கு விற்ற நிலை.

 

சந்தைவெளிச் சரக்கைப்போல இறைவனின் இலவசப் பரிசாகிய மீட்பை காசுக்கு விற்கவும் வாங்கவும்முடியும் என்ற போதனையே புனித மார்ட்டின் லூத்தரின் எரிச்சலைக் கிளப்பியது. டெட்செல் என்ற ‘பாவமன்னிப்புச்சீட்டு விற்பனையாளர்’ ஒவ்வொரு நகரமாகச் சென்று பலமாக முரசறைந்து மக்களின் கவனத்தை ஈர்ப்பார். கூட்டம் கூடும்போது, ‘பாவம்செய்யும் உரிமம்’ காசுக்கு விற்கப்படும். விட்டன்பர்க்நகருக்கு டெட்செல் வருவதாகக் கேள்விப்பட்ட லூத்தர், “வரட்டும், அவனது முரசில் துளையிடுவேன்”என்று சவால் விடுத்தார்.

 

பாவ மன்னிப்புச் சீட்டு விற்பனை 1500ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் போர்ஜியா என்ற போப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. இதுதான் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. புனித பேதுருவின் பேராலயம் கட்ட தேவையான பணம் சேகரிக்க நிர்ப்பந்தம் வந்தபோது, பாவமன்னிப்பு விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. எந்தப்பாவமானாலும்—கொலை, விபச்சாரம், பொய், களவு,ஆணையிடுதல், எதுவானாலும்—சரி; செய்த பாவங்கள் மட்டுமல்ல செய்யப்போகும் பாவங்களும் மன்னிக்கப்பட்டன.

 

நயாபைசாவுக்கு நாலு கத்தரிக்காய்ப் போல இரட்சிப்பு சந்தையில் மலிந்து கிடந்தது. தேவனின் இலவசப் பரிசை ஏளனமான சந்தைப் பொருளாய் மாற்றியதுதான் லூத்தரின் பொறுமையை இழக்கச்செய்த கடைசி அடி! பத்தாம் லியோ எனும் ரோமாபுரி அரசன் லூத்தரைப் பார்த்து கர்ஜித்து, திருச்சபையை அக்டோபர் 2005விட்டு விலக்கிவைக்கும் ஆணையை அனுப்பியதோடு, 60 நாட்களுக்குள் ரோமாபுரி வந்து விளக்கமளிக்கவும், அப்படி வராவிட்டால் நெருப்பில் மடியும்தண்டனையறிவிப்பையும் அனுப்பிவைத்தான்.

 

இந்த சலசலப்புகளை சட்டைசெய்யாத லூத்தர்,1520ம் ஆண்டு டிசம்பர் 10 அன்று விட்டன்பர்க்நகரின் வாசலுக்கு வெளியே போப்பின் ஆணையையும், Decretals of clement VI, the Summa Angelica… the Chrysposus of Dr. Eck, இன்னும்பிற ஆவணங்களையும் தீயிட்டுக் கொளுத்தினார்.

 

அந்த நாளிலிருந்து மகா பாபிலோன் மீது ஊற்றப்பட்ட தேவகோபம் அதனை எரித்து முடிக்குமளவும் நின்றபாடில்லை. ‘ஞானி’ என்று பெயர் பெற்ற, விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் எலெக்டர்ஃப்ரெட்ரிக், போப்பின் கோபத்திலிருந்து மார்ட்டின்லூத்தரைப் பாதுகாத்தார்.

 

மார்ட்டின் லூத்தர், புகழ்பெற்ற Worms என்றஇடத்திற்கு 1521இல் வந்தார். அங்கே சார்லஸ்சக்கரவர்த்தி முன்னிலையிலும் அரசின் பிரதானிகள்முன்னிலையிலும் தனது நிலையை விளக்கி நியாயப்படுத்தினார். அவரது கருத்துக்களைத் தவறெனஒத்துக்கொள்ளும்படி மார்ட்டின் லூத்தரை அவர்கள்கேட்டபோது, அவரது காலத்தை வென்றுநிற்கும் பதில் இதுதான்: “தங்களுக்குள்ளாகவே வேறுபட்டகருத்துக்களைக் கூறியும், தவறான கருத்துக்களைஅடிக்கடி பரிமாறியும் வரும் போப் மற்றும் ஏனையமன்றங்கள் முன்பாக என் விசுவாசத்தைக் கைவிட்டுமண்டியிட முடியாது. வேதத்தின் சாட்சியால் நான்தவறென்று நிரூபிக்கப்பட்டாலொழிய என்னுடையவிசுவாசத்திலிருந்து பின்வாங்க முடியாது; பின்வாங்கவும் மாட்டேன். இந்த நிலைதான் என் இறுதிநிலை (Here I stand); தேவனே! எனக்கு உதவிடும்,ஆமென்!”

 

Worms இல் மார்ட்டின் லூத்தர் தங்கியிருந்தவேளையில், சார்லஸ் சக்கரவர்த்தியின் ஸ்பானியவீரர்கள் உண்டு பண்ணின கலவரம் கொஞ்சநஞ்சமல்ல.மார்ட்டின் லூத்தர் 1520இல் எழுதிய சபையின் பாபிலோனியச் சிறைப்பிடிப்பு என்ற நூலின் அனைத்துப்பிரதிகளையும் அழித்துவிடும்படியாக நடவடிக்கை எடுத்தனர். அந்தப் புத்தகத்தில், கிறிஸ்தவ சபையின்மேல் 1000 ஆண்டுகளாக ரோமாபுரி செலுத்திவந்த ஆதிக்கத்தை, யூதர்களின் எழுபது ஆண்டுபாபிலோனிய அடிமைத்தனத்திற்கு ஒப்பிட்டு எழுதியிருந்தார். இந்த அடிமைத்தனம் விரைவில் ஒழியும் எனவும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான ஆயத்தம் ஆரம்பித்துவிட்டதெனவும் லூத்தர் உணர்ந்திருந்தார்.காலங்களின் அடையாளங்களை சாத்தானும் அறிவான். தனது கட்டுரைகள் சரியானவையே Worms நகரில் மார்ட்டின் லூத்தர் வாதிட்டுக் கொண்டிருந்த வேளையில் ஸ்பானிய இராணுவத்தினர் அவரது புத்தகத்தின் பிரதிகளை பறிமுதல் செய்யவும்,சுட்டெரித்துப் பொசுக்கவும் வீடுவீடாய் நுழைந்தனர்.

 

நான்கு உலக சாம்ராஜ்யங்களில் முதல் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாய் 5ஆம் சார்லஸ் விளங்கினார். உலக சரித்திரத்திலேயே மிகப் பிரமாண்டமான சாம்ராஜ்யத்தை அவரது செங்கோல் ஆண்டுகொண்டிருந்தது. ஆனால் லூத்தரின் பேனா முனையோ அதனைவிடக் கூர்மையாய் இருந்தது. இறைவனின் சீர்திருத்தத்தை எதிர்த்து நின்றால் இல்லாமற் போய்விடுவாய் என லூத்தர் 5ஆம் சார்லஸை எச்சரித்தார்.அப்படியே, அவர் தோல்வியும் கசப்புமுற்ற மனிதனாய்மடிந்தார்.

 

ஜெர்மன் மொழியில் வேதம்.

 

லூத்தருக்கு அரசுத் தடை விதிக்கப்பட்டது. அவரதுபாதுகாப்பு கருதி, அவரது நண்பர்கள் அவரைவார்ட்பர்க் அரண்மனைக்குக் கடத்திச்சென்றனர்.

 

ஜங்கர் ஜார்ஜ் என்ற புனைப்பெயரில் மார்ட்டின்லூத்தர் புதிய ஏற்பாட்டைக் கிரேக்கத்திலிருந்து ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார். மிக ஆச்சரியகரமாக, ஒருசில வாரங்களிலேயே இவ்வேலையைமுடித்தார். விட்டன்பர்க் நகரில் அவருக்கு நேரிட்டதொந்தரவுகளால், அவர் அரண்மனையை விட்டுவெளியேறி தன் இல்லம் வந்து, பின்னர் பழையஏற்பாட்டையும் மொழிபெயர்த்து முடித்தார்.

 

சாத்தான் மீது ‘ மை’ போர்!

 

அப்போதுதான், மார்ட்டின் லூத்தர், ஜெர்மானியமொழியில் வேதத்தை மொழிபெயர்க்கும் மறக்கவியலா மாபெரும் வேலையைத் தொடங்கியிருந்தார்.தனக்கு வந்துள்ள ஆபத்தை தெள்ளத்தெளிவாய்உணர்ந்த சாத்தான் மிக உக்கிரமடைந்தான். அவன்இரவு பகலாய் லூத்தரின் அமைதியைக் கெடுக்கமுயன்றான். பொறுமையிழந்த மார்ட்டின் லூத்தர்கடைசியில் தனது மைப் புட்டியை எடுத்து அவன்மீதுவீசினார். இன்றும் அந்த மை கறையைச் சுவரில்காணலாம். ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட தேவனது வார்த்தையே பிசாசுக்கு மரண அடி!

 

கி.பி. 150இல் மொழிபெயர்க்கப்பட்ட இலத்தீன்-இத்தாலிய மொழிபெயர்ப்புக்குப் பிறகு, மிக நேர்த்தியாகவும், துல்லியமாகவும் செய்யப்பட்ட வேத மொழிபெயர்ப்பு இதுவே. மற்ற மொழியாக்கங்களெல்லாம்இந்த அற்புத மொழிபெயர்ப்பின் நகல்களேயாகும்.

 

1522இல் புனித மார்ட்டின் விட்டன்பர்குக்குத்திரும்பினார். இங்குதான் வேதத்தின் அற்புதமான ஆங்கில மொழிபெயர்ப்பு வேலையைச் செய்தார்.ஜேம்ஸ் அரசர் ஆங்கில மொழியாக்கத்தின் (King James Version) 75 சதவீதம், ஆங்கிலேய மறுமலர்ச்சியாளர் வில்லியம் டிண்டேலின் கைவேலைதான். அந்தடிண்டேல் இங்குதான் மார்ட்டின் லூத்தரைச் சந்தித்துஅவரிடமிருந்து நிறைய எடுத்தெழுதிக் கொண்டார்.டிண்டேல் வேதத்தின் ஓரக்குறிப்புகள் அப்படியே லூத்தரின் மொழிபெயர்ப்பை ஒத்துள்ளது. கற்றறிந்தஸ்பானியர்கள் அநேகர் ஜெர்மானிய மொழியைக்கற்றிருந்ததால், மார்ட்டின் லூத்தரின் பாணி ஸ்பானிய மொழி பெயர்ப்புகளிலும் படிந்தது.

 

கன்னியாஸ்திரியாவது வேடிக்கையா?

 

கறைபட்ட உலகினின்று விடுபட்டு கர்த்தரின்மணவாட்டியாக மாற ஒரே வழி கன்னியாஸ்திரியாவதே என்று நம்பவைக்கப்பட்டு கன்னியர் மடத்துள்அநேகர் கைதிகளாயினர். குருவானவர்களின் ஆசைகளுக்கு பலியாகி, சில வேளைகளில் அவர்களது குழந்தைகளை வயிற்றில் சுமக்கவேண்டிய நிர்ப்பந்தம்தம்மேல் சுமத்தப்பட்டபோது, அவர்களது அதிர்ச்சி எத்தகையதாயிருந்திருக்கக்கூடும் எனக் கற்பனைசெய்துபாருங்கள். தப்பிக்க வழியேயின்றி மடத்தின்இருண்ட சுவர்களுக்குள் கொடூரமான மரணத்தின் வாயில் விழுந்தோர் அநேகர்.ஆசீர்வாதமாய் வந்த மறுமலர்ச்சியே, இந்தத் திகில்கொடுமையினை இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும்இல்லாதொழித்தது. சாம்ராஜ்யத்தின் தண்டனையின்கீடிந நிச்சயமற்றவாழ்வு வாழந்த லூத்தர் திருமணம் செய்துகொள்ளஆர்வம் கொள்ளவில்லை. கைது செய்யப்படவும்,உயிரோடு கொளுத்தப்படவும் எந்நேரமும் ஆயத்தமாகவே இருந்தார்.புனித காத்ரீனா என்கிற ஒரு கன்னியாஸ்திரியைத்தவிர, காப்பாற்றப்பட்ட அனைத்து கன்னியர்க்கும் மணவாளர் கிடைத்துவிட்டனர். புனித மார்ட்டின்லூத்தரைத் தவிர வேறு ஆளே இல்லை என்ற நிலைக்குவந்துவிட்ட காத்ரீனாவின் கரம்பற்றித் திருமணபந்தத்தில் இணைந்தார் லூத்தர்.இருண்ட, அடைபட்ட கன்னியர் மடத்தில் கன்னியர்கண்ணியம் காப்பது இயலாதென்று அறிந்து, லூத்தர்காப்பாற்றிய அற்புதமான மலர் காத்ரீனா, 1525ல்லூத்தரின் மனைவியானார். மறுமலர்ச்சிப் பணியில்நல்ல உதவியாளராய் மட்டுமல்ல, நான்கு குழந்தைகளின் மகிழ்ச்சிநிறைத் தாயாகவும் விளங்கினார்.

 

விட்டன்பர்கில் ‘ஒரு மனித சேனை!

 

அவர் புரட்சியாளர், வேத மொழிபெயர்ப்பாளர்,எழுத்தாளர், வெளியீட்டாளர், அச்சடிப்பவர், பிரசங்கியார், அன்புநிறைக் கணவன், நான்கு குழந்தைகளின்ஆசைத் தகப்பன். கைகளினாலேயே அச்சுப்பணிமுழுவதும் செய்ய வேண்டிய கடின நாட்களிலேயே,அவரது எழுத்துக்கள் 100 தொகுதிகளைத் தாண்டிவிட்டன.

 

சரித்திரத்திலேயே, மிகவும் விஷம் ஊட்டப்பட்டமனிதர்களில் ஒருவர் மார்ட்டின் லூத்தர். புனிதபவுலுக்குப் பின் அதிக முறை விஷம் கொடுக்கப்பட்டமனிதர் லூத்தர்தான். 95 கோட்பாடுகளை வெளியிட்டஉடனேயே, அவரைக் கொல்லச் சதி செய்து “போர்ஜியா விஷம்” கொடுத்தனர். இவ்விஷத்தின் பலனால்அவரது ஜீரண உறுப்புக்கள் மீளமுடியாப் பாதிப்புக்குள்ளாயின. விஷம் ஒரு மனிதனை உடல் ரீதியாகமட்டுமல்ல, மன ரீதியாகவும் பாதிக்கக்கூடும். 63வயதில் அகால மரணம் எய்தும்வரைத் தேவன் அவரைவிஷத்தின் பாதிப்புகளிலிருந்து காத்துக்கொண்டார்.

 

இன்னொரு நெகேமியா!!

 

பழைய ஏற்பாட்டில் பாபிலோனிலிருந்த யூதர்களைவெளிக்கொணர்ந்து எருசலேம் வந்தடைய வழிநடத்திய தீர்க்கன், நெகேமியா. பாபிலோனியச் சிறைப்பிடிப்புக்குப் பின்னர், இடிந்த ஆலயத்தை கட்டிஎழுப்பவும், யேகோவா ஆராதனையைப் புதுப்பித்துநிலைநிறுத்தவும் எழுந்தவர் நெகேமியா.

 

“பிரசங்கிகளின் இளவரசன்” என லூத்தர் அழைக்கப்படுகிறார். நரகின் வாயடைக்கும் நாவன்மை பெற்றவர் அவர். அவரது பிரசங்கங்கள் மட்டுமே 100தொகுப்புகளைத் தாண்டிவிட்டன. பாபிலோனியச்சிறையிருப்பிற்குப் பின் யூதர்களின் ஆலயத்தைத்திரும்பவும் கட்டிய நெகேமியாவைப் போன்றவர்லூத்தர்! இவ்விருவருமே ஒரே அச்சில் வார்க்கப்பட்டவர்களாகவே காட்சியளித்தனர். அந்நிய இனத்தவளாகிய தன் மனைவியை விலக்கிவிட மறுத்த யூதன்ஒருவனை நெகேமியா கைநீட்டி அறைந்த செய்தியைபழைய ஏற்பாட்டில் வாசிக்கலாம். லூத்தர் ஒருவரையும்அடிக்கவில்லைதான்… ஆயினும், தனது பேச்சாலும்,எழுத்தாலும் போப்பின் ஆதிக்கத்தை ஆட்டங்காணவைத்துவிட்டார்.சாத்தானின் முகத்தில் நிறையவே மையடித்துவிட்டார், லூத்தர். மறுமலர்ச்சியாளனாய் வாடிநந்த தமதுவாடிநவில் 100 தொகுப்பு நூல்களையும், ஆயிரமாயிரம்பிரசங்கங்களையும் நமக்களித்துள்ளார். அவர் ஜெர்மனியில் மொழிபெயர்த்த பழைய ஏற்பாடு, ஓர் மாபெரிய காவியப்பணி!

 

கடைசி வார்த்தைகள்!!

 

1546 பெப்ருவரி 18 காலையில் பரம வீடு ஏகினார்லூத்தர். அவரது கடைசி வார்த்தைகள் இவைகளே:

 

லூத்தரின் கல்லறையின் அருகில் நின்றுகொண்டுஅவர் ஈல்பன் (Eisleben) நகரில் செலவழித்த கடைசிநாட்களை நினைத்துப்பார்க்கலாம். 1546 ஜனவரி28இல் அந்நகர் வந்தடைந்தார். உடல்நலம் குன்றியிருந்தபோதும் பெப்ருவரி 17 வரையிலும் நடைபெற்றமாநாடுகளில் கலந்துகொண்டார்; நான்கு பிரசங்கங்கள் செய்தார்; மான்ஸ்பீல்ட் பகுதிக்கான சபை ஒழுங்குகளைப் பரிசீலனை செய்தார். 17ஆம் தேதி அவர்உடல்நிலை மிகவும் கெட்டுப்போனதால், அவரதுநண்பர்களான பிரபுக்கள் அவரை வீட்டைவிட்டுவெளியே போக அனுமதிக்கவில்லை. அன்றிரவு உணவுவேளையில், தம்மை நெருங்கிவரும் மரணத்தைப்பற்றிவெகுவாகப் பேசினார். அவ்வேளையில், மறு உலகில்நாம் ஒருவரையொருவர் அடையாளங்கண்டுகொள்ளமுடியுமா? என எழுப்பிய வினாவுக்கு, “முடியும் என்றேநினைக்கிறேன்” எனப் பதிலுரைத்தார். “நான் ஏன்இவ்வளவு களைப்பாய் இருக்கிறேன்?” என ஆச்சரியப்பட்ட அவர், “என் வேதனை முன்பைவிட மிகுதியாயுள்ளது. ஒரு அரைமணி நேரம் தூங்கினால்சரியாகிவிடும்” என்று சொல்லி, தூங்கப்போனார்.ஒன்றரைமணி நேரம் கழித்து பதினொரு மணிக்குஎழுந்த அவர் சுற்றியுள்ளோரைப் பார்த்து, “என்ன!இன்னுமா இங்கிருக்கிறீர்கள்? உங்களுக்கு ஓய்வுவேண்டாமா?” எனக் கேட்டார்.

 

அங்கேயே இருக்கப்போவதாக அவர்கள் சொன்னபோது, லூத்தர் உணர்ச்சிவசப்பட்டுச் சத்தமிட்டார்:“என்னை மீட்டெடுத்த சத்தியபரனாகிய கர்த்தாவே,உமது கரங்களில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்.அன்பு நண்பர்களே, ஆண்டவரின் நற்செய்திக்காகவும்,அதன் ஆளுகை விரிவாக்கத்திற்காகவும் ஜெபியுங்கள். ஏனெனில், சபைச் சங்கமும் (council of trent), போப்பும் அதனை அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றனர்.” அதன்பின் ஒருமணி நேரம் தூங்கினார்.

 

எழுந்தபோது, “நான் மிகவும் சுகவீனமாயுள்ளேன்.நான் பிறந்த இடமாகிய இங்கேயே தங்கியிருத்தல்நல்லதென நினைக்கிறேன்” என்றார். வியர்வை வரும்படியாக அறையில் நடந்து பார்த்தார்; பின், படுத்துசுற்றிலும் அநேகத் துணிகளையும் தலையணைகளையும் வைத்துப்பார்த்தார். ஒன்றும் பலனளிக்கவில்லை.பின்னர் ஜெபிக்கத் தொடங்கினார்: “என் பிதாவே,ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனே, சகலஆறுதலின் ஊற்றே, நான் விசுவாசிக்கிற உமது பிரியகுமாரனை எனக்கு வெளிப்படுத்தியதற்காக நன்றிசொல்கிறேன். அவரையே அறிந்து, பிரசங்கிக்கிறேன்;அவரையே நேசித்து, அவரிலேயே மகிடிநகிறேன்; அவரையே போப்பும், பக்தியற்றோரும் நிந்திக்கின்றனர்.

 

எனது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உம்மிடத்தில் என் ஆவியை ஒப்படைக்கிறேன். இம்மைக்குரிய உடலைக் களைய ஆயத்தமாகிறேன். இவ்வாடிநவிலிருந்து நீங்கும் நேரம் நெருங்குகிறது. ஆயினும்,உம்மில் என்றென்றும் நிலைத்து வாடிநவேன் என்றறிவேன். சத்தியபரனாகிய கர்த்தாவே, நீரே என்னைமீட்டுக்கொண்டீர்; உமது கரங்களில் எனது ஆவியைஒப்படைக்கிறேன்.” அவரது கண்கள் மூட, மயக்கநிலைக்குள் ஆடிநந்தார். மறுபடி விழித்த வேளையில்,ஜோனாஸ், “பரிசுத்த தந்தையே, நீங்கள் போதித்தவிசுவாசத்தில் உறுதியோடுதான் மரிக்கிறீர்களா?”என்று கேட்டார். லூத்தர் கண்களைத் திறந்து, கூர்மையாய்ப் பார்த்து “ஆம்!” என்றார். பக்கத்திலிருந்தோர்பார்த்துக்கொண்டிருக்கும்போதே வெளிறிப்போனார்;உடல் குளிர்ந்தது; அவரது மூச்சு வேகமும் குறைந்துகொண்டே வந்தது. இறுதியில், ஓர் ஆழமான பெருமூச்சுடன், மார்ட்டின் லூத்தர் உயிர் நீத்தார். மகாஉயிர்த்தெழுதலின் நாள்வரையிலும், அவரது உடல்ஜெர்மனியின் விட்டன்பர்கில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறது. அந்நாளிலே, அவரோடு நீயும் காணப்படுவாயா???

 

BYM -அக்டோபர் 2005
Advertisements