சகோ.தினகரன் மறைவை தெடர்நது நடை பெற்ற சம்பவங்களை குறித்து டாக்டர்.புஷ்பராஜ் அவர்கள் தமது இதழில் பால் தினகரனை குற்றம் சாட்டி எழுதியுள்ளார்

சகோ.தினகரனுக்கும் தமக்கும் இருந்த அல்லது இருக்கின்ற உறவை பற்றி மணம் திறந்துள்ள டாக்டர்.புஷ்பராஜ் அவர்கள், சில இடங்களில் சகோ.தினகரன் செய்த சில தவறுகளையும் சுற்றி காட்டியுள்ளார்.  இருவருடைய இளமைகால ஊழியங்கள் எப்படி இருந்தது? மதுரையில் கையெந்திபவனில் சாப்பிட்டது, ஜெபிப்பதற்காக சகோ.தினகரன் அவர்கள் டாக்டர்.புஷ்பராஜ் தேடி வருவது என அந்த கால நடப்புகளை எழுதியுள்ளார்.

அதே சமயத்தில் சகோ.தினகரன் இறந்த பின்பு நடை பெற்ற சம்பவங்களை தவறு என்று சுட்டி காண்பிக்கவும் தவறவில்லை. தமது அன்பு நண்பன் அல்லது சகோதரன் இறுதி காரியம் செய்வதற்கு என்னிடம்  பணம் இல்லை என்று பால் தினகரன் கூறிய வார்த்தைகளை கண்டிக்கிறார்.

 அனேக இடங்களில் தினகரன் பாராட்டினாலும் அவர் செய்த பல காரியங்கள் தவறு என்று கூறுகிறார்.

மேலும் படிக்க : http://www.jamakaran.com/tam/2008/april/

Advertisements